2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசியா

இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா முடிவு செய்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டன்களிலிருந்து 2025ஆம் ஆண்டு பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னுக்கு அதிகமாக இருக்கும்.
பாமாயில் -  கோப்புப்படம்
பாமாயில் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா முடிவு செய்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டன்களிலிருந்து 2025ஆம் ஆண்டு பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னுக்கு அதிகமாக இருக்கும் என மூத்த தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2025-26 ஆம் ஆண்டுக்குள் பனை சாகுபடி 1 மில்லியன் ஹெக்டேராக விரிவுபடுத்தும் தெற்காசிய நாட்டின் லட்சியத் திட்டத்தை ஆதரிப்பதற்காகவும், அதே வேளையில் இந்த ஆண்டு சுமார் 1,00,000 முளைத்த பனை விதைகளை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளதாக இந்தோனேசிய பனை எண்ணெய் சங்கத்தின் தலைவர் எட்டி தெரிவித்தார்.

இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு, இந்தோனேசியாவின் பாமாயில் இறக்குமதி 2025 ஆம் ஆண்டில் அதிகரிக்கும். இது 5 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

உள்நாட்டில் கிடைக்கும் சமையல் எண்ணெய் தன்மையை அதிகரிக்கவும் விலைகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கச்சா பாமாயிலுக்கான அடிப்படை சுங்க வரியை இந்தியா 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது.

இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டு 4.8 மில்லியன் டன்களாகக் இருந்தது. இது 2023ல் 6 மில்லியன் டன்களாக இருந்தது. 2024ஆம் ஆண்டின் பெரும்பகுதியில் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது பாமாயில் விலைகள் அதிகமாக இருந்ததே ஒரு காரணம்.

இருப்பினும், ஏப்ரல் 2025 முதல் பாமாயில் விலைகள் சோயாபீன் எண்ணெயை விடக் குறைவாக வர்த்தகமானது.

இந்த ஆண்டு விலை குறித்த எந்தப் பிரச்சினையும் இல்லை. 2025ல் இந்தியாவிற்கான ஏற்றுமதியை அதிகரிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா 2025-26 ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 3,50,000 ஹெக்டேரிலிருந்து 1 மில்லியன் ஹெக்டேராக சாகுபடியை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 மற்றும் 2024ல் இந்தியா சுமார் 5,00,000 விதைகளை வாங்கியது. இந்த ஆண்டும் 1,00,000 அதிகமான விதைகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக எட்டி தெரிவித்தார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!

Summary

Indonesia Palm Oil Exports to India to Exceed 5 Million Tonnes in 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com