3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 446.93 புள்ளிகள் உயர்ந்து 81,337.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.20 புள்ளிகள் உயர்ந்து 24,821.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மும்பை: ப்ளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏற்றத்தால், மூன்று நாள் சரிவு முடிவடைந்து, பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டெழுந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகம் சரிவில் தொடங்கி நிலையில், மத்திய நேர வர்த்தகத்தில் அணைத்து இழப்புகளை மீட்டெடுத்து நாளின் உச்சத்தை நெருங்கியது.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 446.93 புள்ளிகள் உயர்ந்து 81,337.95 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 140.20 புள்ளிகள் உயர்ந்து 24,821.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.21 சதவிகிதம் உயர்ந்த நிலையில் லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஜியோ பைனான்சியல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் & டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை உயரந்த நிலையில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி லைஃப், டைட்டன் ஆகிய பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

தீபக் ஃபெர்டிலைசர்ஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்த நிலையில், ரூ.2,957 கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றதையடுத்து பிஎன்சி இன்ஃப்ராடெக் பங்குகள் 6% உயர்ந்தன.

நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததையடுத்து இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 1% உயர்ந்து முடிந்தன.

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டு நிகர லாபம் 81.4% உயர்ந்து ரூ.12.7 கோடியாக இருந்ததையடுத்து அதன் பங்குகள் 20 சதவிகிதம் உயர்ந்தன.

லாப வளர்ச்சி சீராக இருந்தபோதிலும் வோல்டாம்ப் டிரான்ஸ்ஃபார்மர்ஸின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன.

நிதியாண்டின் முதல் காலாண்டு லாபம் 79% குறைந்து ரூ.103 கோடியாக இருந்ததால் ஜூபிலன்ட் பார்மோவா பங்குகள் ஒரு சதவிகிதம் சரிவு.

கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 24% உயர்ந்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன.

டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 20% அதிகரித்ததால், நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்தன.

போஷ், டோரண்ட் பார்மா, ஷியாம் மெட்டாலிக்ஸ், ஈஐடி பாரி, லாரஸ் லேப்ஸ், எச்டிஎஃப்சி ஏஎம்சி உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.6,082.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.63 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 70.48 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ்

Summary

Markets rebound after 3-day decline.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com