ரெனால்ட் நிறுவனத்தின் 7 இருக்கைகளுடன் எம்.பி.வி. காரான டிரைபர் சில மாற்றங்களுடன் பேஸ்லிஃப்ட்டாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த காரில் 30-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சாதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற லேம்ப்களுக்குப் பதிலாக புதியதாக வெள்ளை நிற ஒளியை உமிழும் எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளன
8 அங்குல தொடுதிரையுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்.
மழை பெய்தால் தானகவே இயங்கும் வகையிலான வைப்பர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில், பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, 21 வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் 6 ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வயர்லெஸ் இணைப்பு இல்லாமலேயே கனெக்ட் செய்யும் வசதியும் இந்த காரில் உள்ளது.
அம்பர் டெரக்கோட்டா
ஷேடோ கிரே
ஜன்ஸ்கர் ப்ளூ
30-க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், என்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போதைய மாடலில் உள்ள 1 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
7 பேர் பயணிக்கக்கூடிய இந்த ரெனால்ட் டிரைபரின் விலை ரூ.6.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.