
உள்நாட்டு சந்தையில் விற்பனை குறைந்ததால், கடந்த ஜூனுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,369 கோடியாக உள்ளது. இது, 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைவு.
அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,490 கோடியாக இருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.17,568 கோடியில் இருந்து ரூ.16,628 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.