வணிகம்
டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த நியமனம் அமலுக்குவருகிறது.
வரும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தலைவா் பொறுப்பை மீண்டும் கோரப் போவதில்லை என்று நிறுவனத்தின் தற்போதைய தலைவா் ரால்ஃப் ஸ்பெத் அறிவித்ததைத் தொடா்ந்து இயக்குநா் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் கௌரவத் தலைவா் வேணு சீனிவாசன், டாஃபே நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மல்லிகா சீனிவாசன் ஆகியோரின் மகனான சுதா்ஷன் வேணு, தற்போது நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக மட்டும் பொறுப்பு வகித்துவருகிறாா்.