ஜிஆர்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக சிறப்பு மாதாந்திர திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜிஆர்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்
Updated on
1 min read

சென்னை: வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக சிறப்பு மாதாந்திர திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

60 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, விலையுயர்ந்த ரத்தினக் கற்களால் உருவான, கைவினை வேலைப்பாடுகள் அமைந்த பிரம்மாண்ட நகைத் தொகுப்புகளை தொடர்ந்து வழங்கிவருகிறது.

தென்னிந்தியாவில் 61 கிளைகள், சிங்கப்பூரில் 1 கிளை என 63 கிளைகளுடன் செயல்பட்டு வரும் நிறுவனம், தனது சிறப்பான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் "கோல்டன் லெவன் ஃபிளக்ஸி' என்ற பெயரில் நகை வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் 11 மாதங்களில் அவர்களுக்குப் பிடித்த நகையை வாங்கலாம். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம், 18% வரை சேதாரம் இல்லை என்பது. தங்க விலை ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி திட்டம் ஒரு பயனுள்ள தீர்வை வழங்குகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com