
கொல்கத்தா: உலகளாவிய பதற்றங்கள் இருந்த போதிலும், ஏப்ரல் முதல் மே 2025ல் சரக்கு கையாளுவதில் ஆண்டுக்கு - ஆண்டு 27.56% பதிவு செய்த நிலையில், இது எங்களுக்கு ஒரு வலுவான நிதியாண்டு என்றது கொல்கத்தா துறைமுகம்.
துறைமுகம் கடந்த ஏப்ரல் முதல் மே வரையான இரண்டு மாதத்தில் 11.252 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது. கடந்த ஆண்டு இது 8.821 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
கையாளப்பட்ட மொத்த சரக்குகளில், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் 8.139 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கும், அதே நேரத்தில் கொல்கத்தா டாக் சிஸ்டம் 3.113 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கை கையாண்டது.
ஹால்டியா டாக் வளாகத்தில், 27.45% சரக்கு கையாளுதல் அதிகரிப்பும், 2024ல் ஏப்ரல் முதல் மே வரையான காலகட்டத்தில் கொல்கத்தா டாக் சிஸ்டத்தில் 27.84% சரக்கை கையாளப்பட்டது.
ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் பெட்ரோலிய பொருட்கள், திரவங்கள், காய்கறி எண்ணெய் மற்றும் நிலக்கரி ஆகிய சரக்குகளை அதிக அளவில் கையாண்டது. அதே வேளையில் கொல்கத்தா டாக் சிஸ்டத்தில் உரங்கள், பருப்பு வகைகள், உணவு தானியங்கள் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவை கையாளப்பட்டது.
குறிப்பிடத்தக்க வகையில் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸில் நிலக்கரி, பெட்ரோலியம் கோக் மற்றும் 29,000 டன் இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றைக் கையாண்டது.
இதற்கிடையில், கொல்கத்தா டாக் சிஸ்டம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிலக்கரி, மரம் மற்றும் உணவு தானிய பொருட்களை கையாண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டாடா மோட்டாா்ஸ் விற்பனை 9% சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.