
சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக இரண்டு ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்பதும் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களை பிரேக் போட்டு நிறுத்தும்போது, சக்கரம் சிக்கிக் கொண்டு வாகனம் சாலையில் சறுக்கிச் செல்லாமல் இருப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பிரேக் அமைப்புகள் ஏபிஎஸ் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது, 125 சிசி திறனுக்கும் அதிகமான எஞ்ஜின்களைக் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ஏபிஎஸ் கட்டாயம் என்ற விதி உள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு வரும் 40 சதவீத இரு சக்கர வாகனங்கள் ஏபிஎஸ் அமைப்பு இல்லாமல்தான் உருவாக்கப்படுகின்றன.
இதையும் படிக்க.. இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்
தற்போது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டுவிட்டால், வாகனம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடிரென அல்லது மிக அழுத்தமாக பிரேக் போடும்போது, சக்கரங்கள் லாக் ஆகி, சாலையில் சக்கரங்கள் தேய்த்துக்கொண்டு செல்லவும், வாகனம் இடறி விழவும் அபாயம் உள்ளது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளை 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஏபிஎஸ் அமைப்புத் தடுக்கிறது என்கிறது ஆய்வுகள்.
மேலும் கூடுதலாக, இருசக்கர வாகன விற்பனையின்போது, வாங்குபவர்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற இரண்டு ஹெல்மெட்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு ஹெல்மெட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.