ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 -க்கு சிறப்பு தள்ளுபடி பற்றி...
Apple iPhone 15
ஆப்பிள் ஐபோன் 15Apple website
Published on
Updated on
1 min read

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நிலையில் ஆப்பிள் ஐபோன் 15 விலையை கணிசமாகக் குறைத்துள்ளது அமேசான். அமேசான் அவ்வப்போது ஆப்பிள் ஐபோன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஆப்பிள் ஐபோன் 15 விலை ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதனை அமேசான் இணையதளத்தில் பல்வேறு தள்ளுபடிகளுடன் ரூ. 26,005-க்கு வாங்க முடியும்.. எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 (128 ஜிபி, கருப்பு நிறம்) ஆரம்ப விலை ரூ. 79,900. அமேசான் இதில் 14% தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஐபோனின் விலை ரூ. 59,900 ஆகக் குறைகிறது.

இதுவே நீங்கள் நல்ல நிலையில் பழைய ஐபோன் 15(512 ஜிபி) வைத்திருந்தால் அதனை கொடுத்துவிட்டு புதிய ஐபோன் 15 வாங்கும்போது ரூ. 30,900 குறைக்க முடியும். இதனால் புதிய ஐபோன் 15 -இன் விலை ரூ. 29,000 ஆக குறைகிறது.

இதன் தொடர்ச்சியாக அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது கூடுதலாக ரூ. 2,995 தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் நீங்கள் வாங்கப்போகும் ஐபோன் 15 -இன் விலை ரூ. 26,005 ஆகக் குறைகிறது.

ஐபோன் 15 சிறப்பம்சங்கள்

6.1 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே,

பிங்க், மஞ்சள், பச்சை, நீளம், கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.

128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி திறன்களில் கிடைக்கும்.

எடை: 171 கிராம்

முக அடையாள சரிபார்ப்பு

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2556x1179 பிக்சல் திறன், ஹெச்டிஆர் டிஸ்பிளே

9 மணி நேர் பேட்டரி திறன்

ஏ16 பையானிக் சிப்.

சி- டைப் சார்ஜர் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com