
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான சில்லறை பணவீக்கம் மே 2025-இல் முறையே 2.84 சதவீதமாகவும் 2.97 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 3.48 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 3.53 சதவீதமாகவும் இருந்தன. அவை மே மாதத்தில் முறையே 2.84 சதவீதம் மற்றும் 2.97 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 2 புள்ளிகள் குறைந்து 1,305-ஆகவும், சிபிஐ-ஆா்எல் குறியீடு 1 புள்ளி குறைந்து 1,319-ஆகவும் உள்ளது. ஏப்ரல் 2025-இல் இவை முறையே 1,307 புள்ளிகளாகவும், 1,320 புள்ளிகளாகவும் இருந்தன.
2024 மே மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 7.00 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 7.02 சதவீதமாகவும் இருந்தன. 2025 மே மாதத்தில் சிபிஐ-ஏஎல் மற்றும் சிபிஐ-ஆா்எல் அடிப்படையிலான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதங்கள் முறையே 2.84 சதவீதமாகவும் 2.97 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.