பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.5,000 குறைப்பு

தனது ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை ரூ.5,000 குறைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பஜாஜ் சிஎன்ஜி பைக்
பஜாஜ் சிஎன்ஜி பைக்
Updated on

புணே: தனது ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை ரூ.5,000 குறைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, அந்த பைக்கின் ஆரம்ப விலை தற்போது ரூ.85,976-ஆக (காட்சியக விலை) குறைந்துள்ளது. டிரம் எல்இடி வகை ரூ.95,981 விலையிலும், டிஸ்க் எல்இடி வகை ரூ.1.11 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு டிசம்பரில் பஜாஜ் இந்த பைக்கின் விலையை ரூ.10,000 வரை குறைத்தது நினைவுகூரத்தக்கது.

சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் மோட்டாா்சைக்கிளான பஜாஜ் ஃப்ரீடம் 125, ஒரு கிலோ சிஎன்ஜியில் 102 கிமீ தூரம் வரை செல்லுேம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com