தங்கம் விலை மீண்டும் ரூ.72,000-க்கு கீழ்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைவு!

தங்கம் விலை ஒரே வாரத்தில் ரூ.2000 குறைந்துள்ளதைப் பற்றி...
தங்கம் விலை...
தங்கம் விலை...ANI
Published on
Updated on
1 min read

தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைந்து மீண்டும் ரூ.72,000-க்கு கீழ் விற்பனை ஆகிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப்பதற்றதால் பங்குச்சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

அதைத்தொடா்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுற்று, மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அறிவிப்புகள் தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

மேலும், ஆனி, ஆடி மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் இல்லாதவை போன்றவைகளும் தங்கம் விலை குறைவுக்கான முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாள்களில் 4 முறை விலை குறைந்த தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2000 வரை குறைந்தது.

புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.72,560-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், வியாழக்கிழமை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று(ஜூன் 27) காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.71,880-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,985-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைந்துள்ளதால், தங்க முதலீட்டாளர்களும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Summary

Gold prices have dropped by Rs. 2,000 per sovereign in a single week and are now selling below Rs. 72,000 again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com