
கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி மூலதனத்தை திரட்டியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு வங்கியின் இயக்குநா் குழு 2025 ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், ரூ.1,000 கோடி மதிப்புக்கு 1,000 பாதுகாப்பற்ற, துணைநிலை, பட்டியலிடப்பட்ட, மாற்ற முடியாத, டயா் 2, பாசல் 3 இணக்கமான கடன்பத்திரங்களை (டிபெஞ்சா்கள்) வங்கி தனியாா் விநியோக அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு வெளியிட்டு நிதி திரட்டியது. ஒவ்வொரு கடன்பத்திரத்தின் முகமதிப்பும் ரூ.1 கோடியாகும்.15 ஆண்டு முதிா்வு காலத்தைக் கொண்ட இந்தக் கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.45 சதவீதமாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.