உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்

நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைகளுக்கு அறிமுகமாகின்றன.
நோவா 5ஜி மற்றும் பிளஸ் 4ஜி
நோவா 5ஜி மற்றும் பிளஸ் 4ஜி படம் / நன்றி - நோவா
Published on
Updated on
1 min read

முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 8ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைகளுக்குச் செல்லவுள்ளன.

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவுள்ளன. இதன் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

சிறப்பம்சங்கள்

  • நோவா 5ஜி ஸ்மார்ட்போன் யூனிசோக் T8200 புராசஸர் உடையது. நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் உடையது.

  • பின்புறம் இரண்டு 50MP கேமரா கொண்டது.

  • 5000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 6GB உள் நினைவகம், 128GB நினைவகம் கொண்டது.

  • 1TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • கருப்பு, நீலம், பச்சை, ஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

  • நோவா பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் யூனிசோக் T7250 புராசஸர் உடையது.

  • நோவா 5ஜிக்கு கொடுக்கப்பட்ட பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களைக் கொண்டது. நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் உடையது.

Summary

AI+ is launching Nova 5G and Pulse 4G smartphones in India on July 8, 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com