டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

Published on

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை 79,344-ஆக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 86,406 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

2024 பிப்ரவரி மாதத்தில் 84,834-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 9 சதவீதம் குறைந்து 77,232-ஆக உள்ளது. மின்சார வாகனங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 51,321-லிருந்து 9 சதவீதம் குறைந்து 46,811-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் குறைந்து 32,533-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com