
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட , அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.26,303 கோடியாக உள்ளது.முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.39,688 கோடியாக இருந்தது. அந்த வகையில், பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் குறைந்துள்ளது.பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.கடந்த ஜனவரியில் ரூ.26,400 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, பிப்ரவரியில் ரூ.25,999 கோடியாகக் குறைந்துள்ளது.
இது, இந்தப் பிரிவில் கடந்த மூன்று மாதங்கள் காணாத குறைந்தபட்ச முதலீட்டு வரவாகும்.ஒட்டுமொத்தமாக, அனைத்து வகை பரஸ்பர நிதித் திட்டங்களிலும் முதலீட்டு வரவு ரூ.40,000 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.