
சர்வதேச அளவிலான இந்தியாவின் ஏற்றுமதி நான்காவது மாதமாக சரிந்து 36.91 பில்லியனாக உள்ளது.
உலகளாவிய போர் பதற்ற எதிரொலி மற்றும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் நாட்டின் ஏற்றுமதி சரிந்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
கடந்த ஆண்டு நாட்டின் ஏற்றுமதி இதே மாதத்தில் 41.41 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது நாட்டின் ஏற்றுமதி 36.91 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் பிப்ரவரியில் மட்டும் 14.05 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ. 12 ஆயிரம் கோடி) அளவுக்கு நாட்டின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டின் இறக்குமதியும் 50. 96 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்திய நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வணிகப் பொருள்கள் மற்றும் சேவைகள் 6.24% அதிகரித்து 750.53 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு 706.43 டாலராக இருந்தது.
நாட்டின் சரக்கு ஏற்றுமதி நவம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மந்தமாகவே இருந்துள்ளது.
2025 ஜனவரியில் 38.01 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, கடந்த ஆண்டு ஜனவரியில் 37.32 டாலராக இருந்தது. டிசம்பரில் 38.01 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி 2023 டிசம்பர் ஏற்றுமதியை விட (38.39 பில்லியன் டாலர்) சரிவாகவே உள்ளது.
2024 நவம்பரில் 32.11 பில்லியன் டாலராக ஏற்றுமதி இருந்துள்ளது. ஆனால் 2023 நவம்பரில் 33.75 பில்லியன் டாலராக இருந்தது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | 5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.