மாருதி சுசூகியின் புதிய இ-விடாரா.. எப்படி இருக்கும்?

மாருதி சுசூகியின் புதிய இ-விடாரா விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது.
இ-விடாரா
இ-விடாரா
Published on
Updated on
1 min read

மிகச் சிறந்த இ-கார் வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்காகவே, விரைவில் அறிமுகமாகவிருக்கிறது மாருதி சுசூகியின் புதிய இ-விடாரா என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த கார் அறிமுகமாகவிருக்கும் நிலையில், இது தற்போது நெக்ஸா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும், முன்பதிவுகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய மாடல் கார், இந்திய வாகனங்களுக்கான சர்வதேச கண்காட்சியில் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டபோதே, பல தரப்பிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே, சந்தையில் உள்ள எலக்ட்ரிக் எஸ்யுவி வகைக் கார்களைப் போல அல்லாமல், பல நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரவிருக்கிறதாம்.

அதாவது 49 கிலோ வாட் மற்றும் 61 கிலோ வாட் என இரண்டு பேட்டரிகளுடன் வருகிறது. இதன் ஆற்றல் என்றால் அது 173 பிஎச்பியாக உள்ளது. இதனால், நீண்ட தொலைவு பயணங்களுக்கு மிகச் சிறந்ததாக இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசூகியின் மற்ற வகை கார்களைப் போல அல்லாமல், உள்கட்டமைப்பு மிகச் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மிகப்பெரிய தொடுதிரை தகவல் தெரிவிப்பு அமைப்பு (இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம்), புதிய டேஷ்போர்டு டிசைன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஏடிஏஎஸ் பிரவில் இரண்டு பாதுகாப்பு அம்சங்களும் கொண்டுள்ளது.

பனோரமிக் சன்ரூஃப், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்பு, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரேர்ல், கனெக்டட் கார் டெக்னாலாஜி, மிகச் சிறந்த உள் அமரும் இடம் என அனைத்துமே கார் பயன்பாட்டாளர்களுக்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் எனவே கணிக்கப்படுகிறது. ரூ.20 லட்சம் முதல் ரூ.25 அல்லது ரூ.30 லட்சத்துக்குள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com