மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்சி ஏ 26
சாம்சங் கேலக்சி ஏ 26 படம் | சாம்சங்
Published on
Updated on
1 min read

மேம்படுத்தப்பட்ட செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம் ஏ வரிசையில் (சீரிஸ்) தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், மற்ற கேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக செய்யறிவு தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கையாண்டுள்ளது.

தனி செயலிகள் இல்லாமல் புகைப்படங்களில் உள்ள பின்புலங்களை அழிப்பது, செய்யறிவு தொழில்நுட்ப மாற்றம் தேவைப்படும் இடங்களைக் குறிப்பிட்டு தேர்வு செய்வது போன்ற அம்சங்கள் இதில் சிறப்பம்சங்களாகும். இதுவே மற்ற கேலக்சிக்கும் கேலக்சி ஏ 26க்கும் உள்ள வித்தியாசமாகும்.

கேலக்சி ஏ 26 சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போன் 6.7 அங்குல திரை கொண்டது. 1380 ஆக்டோ கோர் புராசசர் கொண்டது.

8ஜிபி நிலைத்த நினைவகமும், 256ஜிபி தற்காலிக நினைவகமும் கொண்டது. நினைவக அட்டை மூலம் 2டிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

பின்புறம் 8MP அகலக் கேமராவுடன் 50MP மெயின் கேமராவும், முன்பக்கம் 13MP கேமராவுன் உள்ளது. படங்களை மிகத்தெளிவாகவும், தூரமுள்ள படங்களை நுணுக்கமாகவும் புகைப்படமாகப் பதிவு செய்யலாம்.

மின்கலன் 5000 mAh திறன் கொண்டது. 6வது ஜெனரேஷன் ஓஎஸ் மற்றும் 6 ஆண்டுகளுக்கான மேம்பாட்டுடன் கூடிய பாதுகாப்பையும் வழங்குகிறது.

குறைந்த விலையில் வாங்கலாம்

இந்திய சந்தைகளில் சாம்சங் இணையப் பக்கத்தில் கேலக்சி ஏ 26 ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதோடு பிற இணைய தளப் பக்கங்களிலும் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் அமைத்துள்ள கடைகளிலும் கிடைக்கும். இதன் விலை ரூ. 24,999.

எச்டிஎஃப்சி, எஸ்பிஐ போன்ற வங்கிகளின் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ. 2000 வரை தள்ளுபடி கிடைக்கும். சாம்சங் கடைகளில் வாங்கினால் வட்டியில்லாமல் (12 மாதங்களுக்கு) தவணையில் பணம் செலுத்தலாம். கூடுதலாக தொடுதிரைக்காக ஓராண்டு உத்திரவாதமும் அளிக்கிறது. இதற்காக குறைந்தபட்சமாக ரூ.999 வசூலிக்கப்படுவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com