சேவைகள் ஏற்றுமதி 2-ஆவது மாதமாகச் சரிவு!
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் சேவைகள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 3,162 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
அந்த வகையில், தொடா்ந்து இரண்டாவது மாதமாக அது சரிவைக் கண்டுள்ளது. முந்தைய ஜனவரியில் மாதத்தில் அது 3,472 கோடி டாலராக இருந்தது.
வருடாந்திர அடிப்படையில் சேவைகள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 பிப்ரவரி மாதத்தில் அது 3,696 கோடி டாலராக இருந்தது.
கடந்த பிப்ரவரியில் சேவைகள் இறக்குமதியும் 1,450 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய ஜனவரி மாதத்தில் அது 1,670 கோடி டாலராக இருந்தது.
எனினும், வருடாந்திர அடிப்படையில் முந்தைய 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் சேவைகள் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் 4.8 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.