போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள்!

போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள் பற்றி...
போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள்!
Published on
Updated on
3 min read

போகோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய மொபைல்போன் முதல் டிவோலியின் சாங்க் புக் வரை இந்த வாரம் வெளியான புதிய கேட்ஜெட்கள் பற்றி இங்கு காணலாம்.

டேக் ஹியூயர் சன் கிளாஸஸ் (Tag Heuer Sunglasses)

சுவிஸை தலைமையிடமாகக் கொண்ட கைக்கடிகார நிறுவனமான டேக் ஹியூயர் தற்போது ஜாக் ஹூயூயர் என்ற சன் கிளாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோடை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பையோ- நைலானால் செய்யப்பட்ட புற உதா கதிர்களை எதிர்கொள்ளும் லென்ஸ்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை: ரூ.76,0000-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டேக் ஹியூயர் சன் கிளாஸஸ்
டேக் ஹியூயர் சன் கிளாஸஸ்

போகோ சி71 - கோல்ட் பிளாக் (POCO C71 - Gold Back)

சீன தயாரிப்பான ஜியோமியின் போகோ நிறுவனம் போகோ சி71 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 6.88 அங்குல ஹெச்டி டிஸ்பிளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 8.26 மில்லி மீட்டர் தடிமன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எண்ணற்ற புதிய மேம்படுத்தப்பட்ட நவீன ஃபீச்சர்கள் கொண்டிருக்கிறது இந்த போகோ சி71. இதில், 5200 mAh பேட்டரியும், 32MP செய்யறிவு டுயல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கைரேகை உணர் சென்சாரும், 3.5 மில்லி மீட்டர் சார்ஜிங் ஜாக்கும் ஒரு நேர்த்தியான தோற்றத்தில் தங்க நிறத்தில் கேமராவைச் சுற்றி வட்ட வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்டா கோர் புராஸஸர் இருப்பதால் வேகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை: ரூ. 6,499

போகோ சி71 - கோல்ட் பிளாக்
போகோ சி71 - கோல்ட் பிளாக்

ஐடெல் ஏ50 (Itel A50)

கிட்டத்தட்ட ரூ.6,000 அளவில் மொபைல் தேடுபவர்களுக்கு இது சிறந்த போனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புதிய சாண்டி அம்பர், இங்க் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 6.6 அங்குல ஹெச்டி திரையுடன் ஐபிஎஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரி 24 மணி நேரத்துக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 12gb உள் நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ.6,099.

ஐடெல் ஏ50
ஐடெல் ஏ50

நெபுலா எக்ஸ் 1 (Nebula X1)

4k விடியோக்களை தரமாக பார்க்கும் வகையில் நெபுலா எக்ஸ் 1 புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 200 அங்குலம் வரையிலான திரைகளிலும் விடியோக்களையும் ஒளிபரப்ப முடியும்.

கூடுதல் சிறப்பாக இதனுடன் வயர்லெஸ் செயற்கைக்கோள் ஸ்பீக்கர்களும் கிடைக்கின்றன. இது 8 மணி நேரம் வரை செயல்படக்கூடியது. செய்யறிவு இருப்பதால் ஒரே தொடுதலில் விடியோ அளவைகூட்டி குறைத்துக்கொள்ள முடியும். இதன் விலை: ரூ.2.56 லட்சம்.

நெபுலா எக்ஸ் 1
நெபுலா எக்ஸ் 1

டெஃபால் பிளெண்ட் அப் (Tefal Blend Up)

நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிக்ஸியின் மினி வெர்சனான டெஃபால் பிளெண்ட் அப் திடமாகவும் அதிக திறனுடன் செயல்படக்கூடியது. சத்தான ஸ்மூதிகள் தயாரிப்பதற்கு உதவக்கூடியது. 1000w திறனில் பழச்சாறு, சூப் ஆகியவை தயாரிக்க 8 தானியங்கி நிலைகள் உள்ளன.

ஜிம்களுக்கு செல்லும் இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையிலும் காம்பாக்ட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ.6,800

டெஃபால் பிளெண்ட் அப்
டெஃபால் பிளெண்ட் அப்

டிவோலி சாங் புக் மேக்ஸ் (Tivoli Song Book MAX)

டிவோலி சாங் புக் மேக்ஸ் ரெட்ரோ டிசைனில் மார்டன் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான இசையை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 மணி நேர பேட்டரி பேக்-அப், எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ.51,220.

டிவோலி சாங் புக் மேக்ஸ்
டிவோலி சாங் புக் மேக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com