ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் 'ஃப்ளையிங் ஃப்லி' அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் 'ஃப்ளையிங் ஃப்லி' பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃப்ளையிங் ஃப்லி
ஃப்ளையிங் ஃப்லி
Published on
Updated on
2 min read

நகர்ப்புற பயணத்துக்கு ஏதுவான, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய சிட்டி பிளஸ், அதன் தொழில்நுட்ப பார்ட்னரான குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளையிங் ஃப்லி என்ற முதல் எலக்ட்ரிக் மோட்டார் பைக்கை பெங்களூருவில் அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே, தலைநகர் புது தில்லி, லண்டன் மற்றும் மும்பை நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ராயல் என் ஃபீல்டு நிறுவனத்தின் சிட்டி + என்ற முதல் இ-பைக்கான ஃப்ளையிங் ஃப்லி (Flying Flea), ரெட்ரோஸ்டைல் வாகனமாகவும் உள்ளது.

பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஃப்ளையிங் ஃப்லி, கனெக்டட் தொழில்நுட்பம் மற்றும் அசல் வடிவமைப்புடன் வரும் ஒரு எளிதான இலகு ரக வாகனமாகும். இதன் வரிசையில் முதல் வாகனமான எஃப்எஃப்.சி 6 (FF.C6) அதிநவீன அழகியல் அம்சங்களுடன், இயக்கவும் சுலபமானதாகவும், ஓட்டுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளையிங் ஃப்லி பைக்கின் முக்கிய அம்சமாக இருப்பது அதன் வடிவமைப்பாகும்.

அதன் பெயருக்கு ஏற்றார்போல FF.C6 பைக் - அசல் ஃப்ளையிங் ஃப்லி-பைக்கின் முன்புற சஸ்பென்ஷனின் புதிய வடிவத்தினைக் கொண்டுள்ளது; மேலும், துல்லியமான எஞ்சினியரிங் உடன் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினிய கிர்டர்ஃபோர்க் (Girder fork) மற்றும் சிறப்பான மட்கார்டும் இதில் உள்ளன.

அந்தக் காலத்து பாரம்பரிய மோட்டார் சைக்கிள் வடிவமைப்பில் புகழ்பெற்ற கிர்டர்ஃபோர்க் – தற்போது கநவீன மெட்டீரியல்கள் மற்றும் பொறியியல் திறனுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது;

இதனால் வாகனத்திற்கு மேம்பட்ட வலிமை, ஆயுள் மற்றும் அனாயசமான கையாளும் சௌகரியமும் கிடைக்கிறது. இந்த மேம்பட்ட கிர்டர் ஃபோர்க்-உடன் இன்று மார்கெட்டில் கிடைக்கும் ஒரே மோட்டார்பைக், FF.C6 மட்டுமேயாகும். எனவே, இது பாரம்பரியம் மற்றும் புதுமை ஒருங்கிணைந்த தனித்துவமான இ-மோட்டார் பைக்காக உள்ளது.

ஃப்ளையிங் ஃப்லி பைக்கின் கொள்கைகளின் முக்கிய அம்சமாக இருப்பது அதன் பேட்டரி ஃபின்ஸ் வடிவமைப்பு – அதாவது இது பாரம்பரியம் மற்றும் புதுமையை அற்புதமாக ஒன்றிணைத்துள்ளது.

ஃப்ளையிங் ஃப்லி
ஃப்ளையிங் ஃப்லி

ஒற்றைப்படை வரிசைகளில் அமைக்கப்பட்ட இதன் டைனமிக் முன்புற ஃபின்ஸ் – முற்போக்கான சிந்தனையுடன் கூடிய இதன் தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்துகின்றன

வாகனத்தின் முக்கிய அம்சமாக இருப்பது அதன் பயண அனுபவமாகும்; அது குவால்காம் ஸ்னாப்டிராகன் QWM2290 புராசஸர் மூலம் இயக்கப்படும் - உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு ஆப்பரேட்டிங்சிஸ்டமாகும்.

இதன் விலை மற்றும் இது விற்பனைக்கு வரவிருக்கும் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com