7,000Mah பேட்டரியுடன் உருவாகியுள்ள ரியல்மி ஜிடி 7..! ட்ரீம் எடிஷனில் கார் பந்தய நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

ரியல்மி வெளியிடவிருக்கும் ஜிடி 7 வரிசை ஸ்மார்ட்போன்கள் குறித்து...
ரியல்மி ஸ்மார்ட்போன்கள்
ரியல்மி ஸ்மார்ட்போன்கள்படங்கள்: எக்ஸ் / ரியல்மி
Published on
Updated on
1 min read

ரியல்மி நிறுவனம் ஜிடி 7 ட்ரீம் எடிஷன் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தமாத இறுதியில் மே.27ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஜிடி 7 ஸ்மார்ட்போனில் 7,000Mah (மில்லிஆம்ப்ஸ் ஹவர்ஸ்) பேட்டரி திறமையுடன் உருவாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுடன் ஜிடி 7டி, ஜிடி 7 ட்ரீம் எடிஷன் என்ற எதிய வகை ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகவிருக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போனில் முதல்முறையாக கார் பந்தயத்தில் கலக்கிவரும் அஸ்டன் மார்டின் எஃப்1 உடன் 3 ஆண்டுகளுக்கு ரியல்மி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே, ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 7 ட்ரீம் எடிஷன் குறைவான அளவிலேயே உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

இந்த வகைமையில் ஸ்மார்ட்போன் எப்படி இருக்குமென இதுவரை புகைப்படம் வெளியாகவில்லை. ஆனால், அதன் பாக்ஸ் பச்சை நிறத்தில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடி 7 ட்ரீம் எடிஷனின் தொழில்நுட்ப விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், அதுவும் ஜிடி 7 போலவே இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியல்மி ஜிடி 7 சிறப்பம்சங்கள்

194 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.7 அங்குலம் அளவுள்ள அமோல்ட் திரையைக் கொண்டது.

32mp (மெகா பிக்சல்) செல்ஃபி கேமிராவும் முதன்மை கேமிரா 50mp (மெகா பிக்சல்) ஐஎம்எக்ஸ் 906 ஓஐஎஸ் லென்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது.

7000 mah (மில்லிஆம்ப்ஸ் ஹவர்ஸ்) பேட்டரி கொண்டதால் நீண்ட நேரம் உபயோகிக்கலாம். 120வாட்ஸ் அதிவேக சார்ஸ் திறன் கொண்டதாக உருவாகியுள்ளது.

9400e மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸரை கொண்டதால் கேமிங் விளையாடுவதற்கும் ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் பல பயனர்களுக்கு உதவும் வகையில் 12,16 ஜிபி Ram (தற்காலிக நினைவகம்) கொண்ட வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

பாரிஸில் வரும் மே.27ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன்கள் (ஜிடி 7, ஜிடி 7டி, ஜிடி 7 ட்ரீம் எடிஷன்) அறிமுக விழா நடைபெற இருக்கிறது. இதில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

2018 முதல் இயங்கிவரும் ரியல்மி 200 மில்லியன் (20 கோடி) பயனாளர்களை 2023இல் பெற்றது.

இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 168 சதவிகித வளர்ச்சியை ரியல்மி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com