8.1% வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கும் இந்திய கணினி சந்தை!

தனிநபர் கணினி சந்தையானது மார்ச் 2025 காலாண்டில் 8.1 சதவிகிதம் அதிகரித்து 33 லட்சம் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான சர்வதேச தரவு கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: குடியரசு தின விற்பனை மற்றும் சிறப்பு விற்பனை ஆகியவற்றால் தனிநபர் கணினி சந்தையானது மார்ச் 2025 காலாண்டில் 8.1 சதவிகிதம் அதிகரித்து 33 லட்சம் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான சர்வதேச தரவு கழகம் தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் முதல் காலாண்டில், ஹெச்.பி. 29.1 சதவிகித சந்தைப் பங்கோடு தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், அதன் போட்டியாளரான லெனோவா ஆண்டுக்கு ஆண்டு 34.8 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளது சர்வதேச தரவு கழகத்தின் அறிக்கை.

இந்த நிலையில், டெல் கணினியின் விநியோகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.4 சதவிகிதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணினி பிரிவில் டெல் 15.6 சதவிகிதத்துடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏசரின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 7.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தாலும், அதன் சந்தைப் பங்கு 15.4 சதவிகிதமாக மாறாமல் உள்ளதாகவும், இந்திய சந்தையில் ஆசஸ் கணினி விநியோகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்து அதன் சந்தைப் பங்கு 6 சதவிகிதமாக மேம்பட்டுள்ளது.

குடியரசு தின விற்பனை மற்றும் சிறப்பு சேனல் வாயிலாக ஏற்றுமதி செய்ததன் காரணமாக, ஜனவரி முதல் மார்ச் 2025 வரையான காலகட்டத்தில் நுகர்வோர் பிரிவு ஆண்டுக்கு ஆண்டு 8.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச தரவு கழகம் அறிக்கை.

இதையும் படிக்க: இன்சோலேஷன் எனர்ஜி லாபம் 61% அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com