டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சந்தையில் அறிமுகம்
டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்
டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்Tata Altroz
Published on
Updated on
1 min read

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பர், கதவின் கைப்பிடிகளிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸை 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ராஸ் காரை வாங்க விரும்புபவர்கள், ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ், அக்கம்ப்ளிஸ்ட் எஸ், அக்கம்ப்ளிஸ்ட் ப்ளஸ் எஸ் டிரிம் நிலைகளில் புதிய வேரியன்டுகளில் அறிமுப்படுத்தியுள்ள பேஸ்லிஃப்ட் காரை தேர்வு செய்யலாம்.

மாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்ஸா கார்களுக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் கார் கொண்டுவரப்பட்டதாகக் கொள்ளலாம்.

இந்தக் கார்களில் ப்ரொஜெக்டர் அமைப்பானது, முன்பக்கத்தில் முழுமையான எல்இடி லைட்டிங் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரின் முன், பின் பக்கங்கள் மெருகூட்டப்பட்டுள்ளது.

அல்ட்ராஸ் கார்களில், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், முழுதாக 90 டிகிரிவரையில் திறக்கும்வகையில் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 26.03 செ.மீ. எச்டி தொடுதிரைகள் கொண்ட மறுவேலை செய்யப்பட்ட டேஷ்போர்டுகளையும் கொண்டு வந்துள்ளனர்.

dot com

ஹேட்ச்பேக்கின் உயர்தரத்தை உணர்த்தும்வகையில், காரின் உள்புறத்திலும் சில திருத்தங்கள், விளக்குகள், இருக்கையின் துணி (உறை), முன் இருக்கையில் காற்றோட்டம், 360 டிகிரி கேமரா அமைப்பு, காற்று சுத்திகரிப்பு இயந்திரம் முதலானவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புற விளக்குகள் கண்கள் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1.2 லி பெட்ரோல் அல்லது 1.5 லி டீசல் என்ஜின்களில் அல்ட்ராஸ் கார்கள் கிடைக்கின்றன. அவற்றில் டீசல் என்ஜின் கார்கள் ப்யூர் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட் எஸ் வேரியன்டுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி, சிஎன்ஜி (CNG) வகையில் அனைத்து வேரியன்டுகளும் கிடைக்கின்றன.

பழுப்பு, (Dune Glow), வெள்ளை (Pristine White), கருநீலம் (Royal Blue), செந்தூரம் (Ember Glow), சிமென்ட் (Pure Grey) ஆகிய நிறங்களில் கிடைக்கும் அல்ட்ராஸ் கார்களின் ஆரம்ப விலை ரூ. 6.89 லட்சமாக உள்ளது. என்ஜின் வேரியன்டுகளைப் பொறுத்து மாறுபடுவதால், அதிகபட்சமாக ரூ. 11.29 லட்சம்வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிஎன்ஜி கார்கள் ரூ. 7.89 லட்சம் முதல் ரூ. 11.09 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com