

புதுதில்லி: நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் 2025 அக்டோபரில் 9,675 கார்களை விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளது.
புதிய நிசான் மேக்னைட்டுக்கான வலுவான தேவையால் உள்நாட்டில் 2,402 கார்கள் விற்பனையாகியுள்ளது என்றும், அதே வேளையில் 7,273 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் ஜிஎஸ்டி அறிவிப்பும், பண்டிகை மகிழ்ச்சியால் உந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதம் வாகனத்தை வாங்கியதால், இந்த துறைக்கு ஏற்றம் மிகுந்த மாதமாக இது மாறியது. அதே வேளையில், நிசான் மோட்டார் இந்தியாவிற்கும் ஒரு நல்ல மாதமாக அமைந்ததாக அதன் நிர்வாக இயக்குநர் சௌரப் வட்சா தெரிவித்தார்.
பண்டிகை காலத்திற்கு வழிவகுக்கும் வகையில், டீலர் சரக்குகளில் மாதந்தோறும் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறதால், சில்லறை விற்பனையின் வேகத்தையும் விநியோக சீரமைப்பையும் இது பிரதிபலிக்கிறதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 7% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.