ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!

மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 13% உயர்ந்து 124,951 ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 13% உயர்ந்து 1,24,951 வாகனங்களாக உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 1,10,574 ஆக இருந்தது.

2024 அக்டோபரில், உள்நாட்டு விற்பனை 1,01,886 ஆக இருந்த நிலையில், தற்போது 1,16,844 ஆக உயர்ந்துள்ளது. இது 15% உயர்வு என்றது ராயல் என்ஃபீல்ட்.

இருப்பினும், ஏற்றுமதி கடந்த ஆண்டு இதே காலத்தில் 8,688 வாகனங்களிலிருந்து 7% குறைந்து 8,107 வாகனங்களாக உள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்ட் தெரிவித்துள்ளது.

பண்டிகை உற்சாகம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதாக ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும் ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையான பண்டிகை மாதங்களில் இதுவரைக்கும் 2.49 லட்சத்திற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி, எங்கள் உத்வேகத்தையும், பிராண்டின் மீது ரைடர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பையும் பறைசாற்றும் ஒரு மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம் என்றார்.

இதையும் படிக்கவும்: என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!

Motorcycle maker Royal Enfield on Sunday reported a 13 per cent rise in total sales at 1,24,951 units in October as compared to 1,10,574 units in the same month last year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com