

மும்பை: தொடர்ந்து 3-வது நாளாக ரூபாய் மதிப்பு சரிவைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ஐந்து காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிலைபெற்றது.
வலுவான டாலர் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் அதன் அனைத்து நேரக் குறைந்த மட்டத்திற்கு சென்றதாக வர்த்தர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.73 ஆக தொடங்கி, பிறகு இன்ட்ராடே குறைந்தபட்ச அளவான ரூ.88.80 என்ற நிலையை எட்டியது.
முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய முடிவிலிருந்து 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக முடிவடைந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் விமர்சனத்தைத் தொடர்ந்தும், மத்திய வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த நிலையில், வியாழக்கிழமை அன்று இந்திய ரூபாய் 47 காசுகள் சரிந்த பிறகு, வெள்ளிக்கிழமை அன்று ஒரு காசு குறைந்து ரூ.88.70 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.