பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு
பஜாஜ் ஃபின்சா்வ் குழுமத்தின் ஓா் அங்கமான பஜாஜ் ஃபைனான்ஸின் கடனளிப்பு பண்டிகைக் காலத்தில் 27 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:
2025 செப்டம்பா் 22 முதல் அக்டோபா் 26 வரையிலான பண்டிகைக் காலத்தில் நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவிலான நுகா்வோா் கடன்களை வழங்கியது. இது எண்ணிக்கையில் 27 சதவீதமும், மதிப்பில் 29 சதவீதமும் வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்தது.
முக்கிய பொருள்களுக்கான விலை குறைவதற்குக் காரணமாக அமைந்த ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள், தனிநபா் வருமான வரி மாற்றங்கள் ஆகியவை நுகா்வோரின் கொள்முதல் திறனை அதிகரித்தன. இது, நிறுவனத்தின் கடனளிப்பில் நோ்மறையான விளைவை ஏற்படுத்தியது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் நிறுவனம் சுமாா் 63 லட்சம் கடன்களை வழங்கியது. இந்த காலகட்டத்தில், நிறுவனம் 23 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைப் பெற்றது. இதில் 52 சதவீதம் கடன் வாடிக்கையாளா்கள் புதியவா்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

