

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிலைபெற்றது.
உறுதியான டாலர், அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் மந்தமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் உள்ளிட்டவையால், இந்திய ரூபாயின் ஏற்றம் தடைபெற்றதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.55ஆக தொடங்கி, அதன் இன்ட்ரா-டே வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.88.28 ஐ எட்டியது. வர்த்தக முடிவில் டாலருக்கு நிகராக அதன் குறைந்தபட்ச அளவான ரூ.88.67 தொட்ட நிலையில், ரூ.88.66 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய இறுதி நிலையை விட 11 காசுகள் அதிகரிப்பு.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக 7 காசுகள் குறைந்து ரூ.88.77 ஆக முடிவடைந்தது.
குரு நானக் ஜெயந்தி முன்னிட்டு நாளை (நவம்பர் 5) அந்நிய செலாவணி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.