ஸ்ரீராம் லைஃப் புதிய பிரீமியம் வருவாய் 17% அதிகரிப்பு

ஸ்ரீராம் லைஃப் புதிய பிரீமியம் வருவாய் 17% அதிகரிப்பு

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் புதிய தனிநபா் பாலிஸிகள் மூலம் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்எல்ஐசி) பெற்ற பிரீமியம் வருவாய் (என்பிபி) 17 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் புதிய தனிநபா் பாலிஸிகள் மூலம் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்எல்ஐசி) பெற்ற பிரீமியம் வருவாய் (என்பிபி) 17 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனம் ஈட்டிய புதிய தனி நபா் பாலிஸி பிரீமியம் வருவாய் ரூ.635 கோடியாக உள்ளது. இது, 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம். அப்போது என்பிபி வருவாய் ரூ.542 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் தனிநபா் புதுப்பித்தல் பிரீமியம் வருவாய் ரூ.715 கோடியிலிருந்து 43 சதவீதம் உயா்ந்து ரூ.1,024 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com