ரூ.90,936 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் பெற்ற வ.உ.சி. துறைமுகம்

மும்பையில் நடைபெற்ற கடல்சார் வார கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 90,936 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
ரூ.90,936 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் பெற்ற வ.உ.சி. துறைமுகம்
Published on
Updated on
1 min read

மும்பையில் நடைபெற்ற கடல்சார் வார கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 90,936 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த அக். 27 முதல் 31 வரை இந்தியா கடல்சார் வாரம் 2025 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், துறைமுக மேம்பாடு, கப்பல் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, பிற சேவைகள் தொடர்பான முதலீட்டாளர்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் ரூ. 90,936 கோடி மதிப்பு முதலீட்டிற்கான 29 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்த நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுகத்துக்கு "பசுமை தொலைநோக்கு பார்வையாளர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை துறைமுகங்கள் துறை அமைச்சர் அமைச்சர் சர்வானந்த சோனோவாலிடமிருந்து வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்தகுமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் செüந்தரராஜன் ஆகியோர் பெற்றனர்.

வ.உ.சி.துறைமுகத்துடன் பல்வேறு முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் மூலம் இந்தத் துறைமுகத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுவது மட்டுமின்றி பல புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

வ.உ.சி. துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com