

புதுதில்லி: கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா லிமிடெட் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்து ரூ.260.51 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.130.32 கோடியாக இருந்தது.
நடப்பு 2025-26 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.7,907.44 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.6,091.47 கோடியாக இருந்தது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 436 ஷோரூம்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.