கோப்புப் படம்
வணிகம்
விருப்ப எண்கள் ஏலம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை (நவ. 7) முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விருப்ப எண்கள் மின் ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 16 வரை நடைபெறும்.
விருப்பம் உள்ள வாடிக்கையாளா்கள் கைப்பேசி விருப்ப எண்களைப் பெற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.