

புதுதில்லி: அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நவம்பர் 7 தேதியிட்ட கடிதத்தில், மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரியை நீக்கவும் மத்திய உணவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றார். நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடப்பு 2025-26 ஆம் ஆண்டு 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது என்றார் ஜோஷி. இது ஏற்றுமதி ஒதுக்கீடு தொழில்துறை கோரிய 2 மெட்ரிக் டன்னை விட குறைவு.
செப்டம்பர் வரை முடிவடைந்த 2024-25 பருவத்தில் 1 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டில் இந்தியா சுமார் 8,00,000 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி, உள்நாட்டு ஆண்டு தேவை 28.5 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், உற்பத்தி 34 மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் உணவு செயலாளர் சோப்ரா.
இதையும் படிக்க: தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.