

மும்பை: ஐடி மற்றும் நிதிப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதை தொடர்ந்து கடந்த 3 நாட்கள் சரிவை சந்தித்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 538.21 புள்ளிகள் உயர்ந்து 83,754.49 என்ற உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 319.07 புள்ளிகள் உயர்ந்து 83,535.35 ஆகவும், நிஃப்டி 82.05 புள்ளிகள் உயர்ந்து 25,574.35 ஆக நிலைபெற்றது.
பெரும்பாலான துறை சார்ந்த குறியீடுகள் கலவையாக வர்த்தகமானது. நிஃப்டி ஐடி வலுவான ஏற்றத்துடன் லாபத்தை பதிவு செய்தது. அதே நேரத்தில் ஆட்டோ, நிதி சேவைகள், உலோகம், மருந்து, சுகாதாரம், எண்ணெய் & எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகியவையும் மிதமான முன்னேற்றத்தை பதிவு செய்தன.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏர்டெல், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்த வர்த்தகமான நிலையில் டிரென்ட் லிமிடெட், எடர்னல், பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் என்டிபிசி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
அமெரிக்க அரசின் பணிநிறுத்தம் குறித்த சாதகமான தீர்வும், சாதகமான காலாண்டு வருவாய்யும் மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கியதாலும் பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்களிடம் நேர்மறையான மனநிலையை ஆதிகரித்தது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 3.02% உயர்ந்தும், ஹாங்காங்கின் ஹாங் செங் 1.55% உயர்ந்தும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 1.33% வரை உயர்ந்த நிலையில் ஷாங்காயின் காம்போசிட் குறியீடு 0.53% உயர்ந்தன.
ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (வெள்ளிக்கிழமை) ரூ.4,581.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,674.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.