எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.88.57 ஆக நிறைவு!

அமெரிக்க பணிநிறுத்த மசோதாவில் தென்பட்ட முன்னேற்றம் மற்றும் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையின் மத்தியில், ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.88.57 ஆக நிலைபெற்றது.

News image
ரூபாய் மதிப்பு உயர்வு.
Updated On :11 நவம்பர் 2025, 1:25 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: அமெரிக்க பணிநிறுத்த மசோதாவில் தென்பட்ட முன்னேற்றம் மற்றும் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையின் மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.88.57 ஆக நிலைபெற்றது.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் நெருங்கி வரும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை ஆகியவை உள்ளூர் பங்குச் சந்தையை ஆதரித்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், அதிகரித்த கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை இது வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.69 ஆக வர்த்தகமானது. இது இன்றைய இன்ட்ராடேவில் அதிகபட்சமாக சென்று ரூ.88.52 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.72ஆக சென்று அதன் முந்தைய முடிவிலிருந்து 16 காசுகள் அதிகரித்து ரூ.88.57 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.73 ஆக இருந்தது.

summary

The rupee appreciated 16 paise to settle at 88.57 against the US dollar on Tuesday, amid progress on the US shutdown bill and optimism over the US-India trade deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.