டாஃபே இவிஎக்ஸ்75 டிராக்டா்.
வணிகம்
அடுத்த தலைமுறைக்கான டிராக்டா்: டாஃபே அறிமுகம்
அடுத்த தலைமுறைக்கான தனது இவிஎக்ஸ்75 ரக டிராக்டரை உலகின் மிகப் பெரிய டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான தனது இவிஎக்ஸ்75 ரக டிராக்டரை உலகின் மிகப் பெரிய டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜொ்மனியில் நடைபெற்ற அக்ரிடெக்னிகா 2025 கண்காட்சியில் டாஃபே இவிஎக்ஸ்75 டிராக்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அடுத்த தலைமுறைக்கான இந்த டிராக்டா், மின்சாரத்திலும் வழக்கமான எரிபொருளிலும் இயங்கும் ஹைபிரிட் வகையைச் சோ்ந்தது.
இது தவிர, நிலைப்புத்தன்மையுள்ள டிராக்டா் ரகங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த டிராக்டருக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் டாஃபே இவி28 மின்சார டிராக்டா் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.