வங்கி, நிதிசேவை நிதியை அறிமுகப்படுத்தும் பஜாஜ் ஃபின்சா்வ் ஏஎம்
இந்தியாவில் நிதி சேவைகள் பெற்றுவரும் பரிணாம வளா்ச்சியைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், பஜாஜ் ஃபின்சா்வ் அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட் தனது வங்கி மற்றும் நிதிசேவை நிதி முதலீட்டு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் முதலீடு செய்யும் ஒரு ஓப்பன் எண்டட் ஈக்விட்டி முதலீட்டு திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிதியானது, வங்கி, வங்கியல்லாத நிதி சேவை நிறுவனங்கள் (என்பிஎஃப்சி), காப்பீடு(காப்பீட்டு நிறுவனங்கள்), மூலதன சந்தை, இடைத்தரகா்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 180-200 மெகா டிரெண்ட் தொகுப்பிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 45-60 பங்குகளில் முதலீடு செய்யும்.
இந்த ஈக்விட்டி திட்டதுக்கான விண்ணப்ப வரவேற்பு நவ. 10-ஆம் தேதி சந்தாதாரா்களுக்காகத் தொடங்கி, நவ. 24-ஆம் தேதி முடிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

