புதிய கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்காா்ப்

புதிய கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்காா்ப்

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்காா்ப் நிறுவனம் வெளியிடுகிறதுது.
Published on

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்காா்ப் நிறுவனம் வெளியிடுகிறதுது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முந்தைய கடன் பத்திர வெளியீடுகளுக்கு வாடிக்கையாளா்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடா்ந்து, புதிய கடன் பத்திரங்களை வெளியிட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, திரும்பப் பெறக் கூடிய, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. 12.62 சதவீதம் வரை வட்டி வருவாய் அளிக்கக் கூடிய, தலா ரூ.1,000 முகமதிப்பு கொண்ட இந்தக் கடன் பத்திரங்களுக்காக வரும் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் ரூ.10,000 மதிப்பிலான கடன்பத்திரங்களுக்காக விண்ணப்பக்க முடியும். இந்தக் கடன் பத்திரங்கள் 13, 24, 36, 60, 70 மாத பருவகாலங்கள் கொண்டதாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com