

நத்திங் 3 ஏ லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச அளவில் நத்திங் 3 ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் நவ. 27ஆம் தேதி நத்திங் 3 ஏ லைட் வெளியாகவுள்ளது.
சர்வதேச அளவிலான அறிமுகத்தின்போது இருந்த அம்சங்களில் எந்தவித மாற்றங்களுமின்றி, இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், நத்திங் 3 ஏ லைட் ஃபிளாக்ஷிப் பிரிவில் இல்லை என்றாலும், வெகுஜனங்களைக் கவரும் வகையிலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் 3 ஏ லைட் சிறப்பம்சங்கள்
மீடியாடெக்டைமன்சிட்டி 7300 புராசஸர் கொண்டது.
6.77 அங்குல அமோலிட் திரையுடன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் மற்ற ஸ்மார்ட்போன்களை விட பெரிய திரையுடையதாக இருக்கும்.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 1000 Hz திறன் கொண்டது.
நினைவகம் 256GB இருக்கும். கூடுதல் நினைவக அட்டை (மெமரி கார்டு) மூலம் 2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
50MP முதன்மை கேமரா, 8MP அட்ல்ரா வைட் கேமரா உடையது.
5000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விரைவில் வாட்ஸ்ஆப் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.