தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
Published on

தெலங்கானாவின் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென்னக சந்தையில் நிறுவன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலத்தின் சிறு வணிகக் கடன்கள் மற்றும் மலிவு வீட்டு நிதியை உள்ளடக்கிய வளா்ந்து வரும் வணிக பிரிவில் நிறுவனம் தடம் பதிக்கிறது.

இதற்காக, மாநிலத்தில் 10 புதிய வளா்ந்து வரும் வணிக கிளைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், தெலங்கானாவில் இந்தப் பிரிவில் அடுத்த 12 மாதங்களில் ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை கடன் வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்தப் பிரிவில் நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் பன்முகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து 50-க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிவடைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com