

புதுதில்லி: ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 13% பங்குகளை அதானி குழும நிறுவனமான வில்மர் இன்டர்நேஷனலின் துணை நிறுவனத்திற்கு சந்தைக்கு வெளியே, பரிவர்த்தனை மூலம் அதன் பங்குகளை விற்பணை செய்துள்ளது.
அதானி கமாடிட்டிஸ் எல்எல்பி, அதானி வில்மர் நிறுவனத்தின் 16.9 கோடி பங்குகளை வில்மர் இன்டர்நேஷனலின் துணை நிறுவனமான லென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
அதானி கமாடிட்டிஸ் எல்எல்பி, ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 20% பங்குகளை வைத்திருந்தது. விற்பனைக்குப் பிறகு, ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் 9.09 கோடி பங்கை வைத்துள்ளது.
13% பங்குகளை வாங்கிய பிறகு, லென்ஸ் பிரைவேட் லிமிடெட் இப்போது ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் லிமிடெட்டில் நிறுவனத்தின் 56.94% பங்கை வைத்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.