டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.58 ஆக உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.58 ஆக முடிவடைந்தது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.58 ஆக உயர்வு!
PTI Graphics
Published on
Updated on
1 min read

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.58 ஆக முடிவடைந்தது. உள்நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதும் மற்றும் வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை சரிவால் இது சாத்தியமானது.

முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம் குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொண்டிருந்த போதிலும், வலுவான டாலர் மற்றும் அந்நிய மூலதனம் வெளியேற்றம் ஆகியவை, இந்திய ரூபாயின் ஏற்றத்தைத் தடுத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.57 ஆக தொடங்கி, பிறகு ரூ.88.41 ஆக இன்ட்ரா-டேவில் அதிகபட்சத்தை எட்டிய நிலையில் அதன் முந்தைய இறுதி நிலையை விட 2 காசுகள் உயர்ந்து லாபத்தைப் பதிவு செய்தது.

நேற்று (செவ்வாய்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசுகள் குறைந்து ரூ.88.60 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறவைு!

Summary

The rupee closed 2 paise higher at 88.58 against the U.S. dollar on Wednesday (November 19, 2025), aided by buying momentum in domestic equity markets and lower crude oil prices overseas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com