

புதுதில்லி: பங்கு தரகு தளமான குரோவ், தனது தாய் நிறுவனமான பில்லியன் பிரைன்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12% வளர்ச்சியுடன் ரூ.471.33 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட குரோவ், முந்தைய நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.420.16 கோடி நிகர லாபம் ஈட்டியது.
செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் ரூ.1,018.74 கோடியாகக் குறைந்துள்ளது. இது செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் ரூ.1,125.4 கோடியாக இருந்தது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பிறகு அதன் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது குரேவ்.
நிறுவனத்தின் மொத்த பரிவர்த்தனை பயனர்களின் எண்ணிக்கை 1.9 கோடி ஆக உயர்ந்துள்ளதாகவும், இது ஆண்டுக்கு ஆண்டு 27% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குரோவ், 26% சந்தைப் பங்கைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பங்குத் தரகராக உள்ளது.
பில்லியன் பிரைன்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.84% உயர்ந்து ரூ.157.93 ஆக பிஎஸ்இ-யில் முடிவடைந்தன.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.