

ஆப்பிள் ஐபோன் விநியோகஸ்தர்கள் சார்பில், இந்திய செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் இந்திய செல்போன் விற்பனையகங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, புதிதாக விற்பனை செய்யப்படும் ஐஃபோன் 17 வகை மாடல் போன்களை விற்பனை செய்து 90 நாள்களுக்குள் அதில் வெளிநாட்டு சிம் கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு விற்பனையகத்தில் விற்பனையான ஆப்பிள் ஐபோனில், 90 நாள்களுக்குள் வெளிநாட்டு சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் விற்பனை செய்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அந்த கடையின் குறியீடு முடக்கி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், ஆப்பிள் ஐஃபான் விலை அதிகம் என்பதால், இந்தியாவில் ஐஃபோன் வாங்கி அவை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் செல்போன்களில் 3 - 5 சதவீதம் சட்டவிரோதமாக நடைபெறுகிறது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, உக்ரைன் போருக்குப் பின் ஆப்பிள் ஐஃபோன் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.