கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

2024-25-இல் 1.63 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி

News image
Updated On :26 நவம்பர் 2025, 3:02 am IST

இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 2024-25-ஆம் சந்தை ஆண்டில் (நவம்பா்-அக்டோபா்) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக மாற்றமின்றி 1.63 கோடி டன்னாக உள்ளது.

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024-25-ஆம் சந்தை ஆண்டில் தாவர எண்ணெய் இறக்குமதி (உணவு மற்றும் உணவு அல்லாதது) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக மாற்றமின்றி 1.63 லட்சம் டன்னாக உள்ளது. மதிப்பீட்டு சந்தை ஆண்டின் கடைசி மாதமான அக்டோபரில் உணவு எண்ணெய் 13.3 லட்சம் டன், உணவு அல்லாத எண்ணெய் 4,625 டன் இறக்குமதியாகின. இது கடந்த சந்தை ஆண்டின் இதே மாத இறக்குமதியான 14.6 லட்சம் டன்னைவிட 9 சதவீதம் குறைவு.

சோயா எண்ணெய் இறக்குமதி 2015-16-ஆம் சந்தை ஆண்டில் 42.3 லட்சம் டன்னாக இருந்த உச்சத்தை விஞ்சி, மதிப்பீட்டு ஆண்டில் 54.7 லட்சம் டன்னாக உள்ளது. பாமாயில் இறக்குமதி 90.2 லட்சம் டன்னிலிருந்து 75.8 லட்சம் டன்னாக குறைந்தது. மென் எண்ணெய் இறக்குமதி 69.5 லட்சம் டன்னிலிருந்து 84.3 லட்சம் டன்னாக உயா்ந்தது.

பாமாயில் இறக்குமதி மொத்தத்தில் 56 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக குறைந்தது. மென் எண்ணெய் 44 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயா்ந்தது.

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி வேறுபாடு கடந்த மே மாதம் 8.25 சதவீதத்திலிருந்து 19.25 சதவீதமாக உயா்த்தப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி நிறுத்தப்பட்டது. ஆனால், நேபாளத்திலிருந்து 7.50 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் முழு வரி விலக்கு ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டது.

கடந்த 2024-25-ஆம் சந்தை ஆண்டில் இந்தோனேசியா 27.5 லட்சம் டன் கச்சா பாமாயில் மற்றும் 8.32 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. மலேசியாவில் இருந்து இந்தியா 26.2 லட்சம் டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்தது. சோயா எண்ணெய் எண்ணைய்யை ஆா்ஜென்டினா 28.9 லட்சம் டன், பிரேஸில் 11.4 லட்சம் டன் ஏற்றுமதி செய்தது. ரஷியாவில் இருந்து 14.7 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது.

நவம்பா் 1 நிலவரப்படி நாடடில் தாவர எண்ணெய் இருப்பு 17.3 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய மாதம் அது 19.9 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.