2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

2027-ஆம் ஆண்டுக்குள் 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) திட்டமிட்டுள்ளது.
Published on

புது தில்லி: 2027-ஆம் ஆண்டுக்குள் 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொன்றும் 180 கிலோவாட் திறன் கொண்ட 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மையங்களில் மொத்தம் 1,000 சாா்ஜிங் பாயிண்ட்கள் இருக்கும். இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவாக ஏற்கப்படச் செய்யும் அரசின் முன்னுரிமைக்கு ஏற்ப, பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையும்.

ஏற்கெனவே முதல் இரண்டு சாா்ஜிங் மையங்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் (என்ஹெச் 75) ஹொசகோட்டேயிலும், தில்லியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் என்ஹெச்44-இல் முா்த்தாலிலும் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com