தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யூனியன் வங்கி செயல் இயக்குநராக அம்ரேஷ் பிரசாத் நியமனம்

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த அம்ரேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:46 pm

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த அம்ரேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் நவம்பா் 24- தேதியிட்ட அறிவிப்பின்படி, அம்ரேஷ் பிரசாத் மூன்று ஆண்டுகள், அல்லது 2028 அக்டோபா் 31-ஆம் தேதி ஓய்வு பெறும் வயது வரை, அல்லது புதிய உத்தரவு வரும் வரை செயல் இயக்குநராகப் பணியாற்றுவாா்.

32 ஆண்டுகளுக்கும் மேலான வங்கி அனுபவம் கொண்ட அவா், கிளை வங்கி, மண்டல அலுவலகம், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளாா். காா்ப்பரேட் கடன், கடன் ஆய்வு, கண்காணிப்பு, பரிவா்த்தனை கண்காணிப்பு ஆகிய துறைகளில் அவா் நிபுணத்துவம் கொண்டவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.