

கார் விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் மகிந்திரா நிறுவனம், தற்போது பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை ரூ.18 ஆயிரத்துக்கு வாங்கி குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்.
புதுமையான படைப்புகளுக்கு பெயர்பெற்றது மகிந்திரா நிறுவனம். இது குழந்தைகளுக்கு என சிறப்பான காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
மகிந்திரா கார் உற்பத்தி நிறுவனம், இன்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பல முக்கிய அம்சங்களுடன் அறிமுகமாகியிருக்கும் இந்த காரில் ஏகப்பட்ட புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. மகிந்திரா நிறுவனம், தன்னுடைய இ-கார்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், பெங்களூருவில் இன்று புதிய எக்ஸ்இவி 9 எஸ் காரை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கார் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் முதல் 3 வரிசை சீட்டர் கொண்ட இ-கார் என்பது குறிப்பிடத்தகக்து. இந்தக் காருடன் யாரும் எதிர்பாராத வகையில், பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் கார் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் அதன் பெரிய வடிவ கார் போன்றே உருவாக்கப்படடிருப்பதும், முன்,பின் பக்கங்களிலும் எல்இடி விளக்குகளுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல, இந்த கார்களின் கதவுகள் திறக்கும், அதில் குழந்தைகள் அழகாக ஏறி அமர்ந்து கொள்ளலாம். அதில் ஆடியோ வசதி உள்ளது. ப்ளூ டூத் இணைத்த பாடல்களை கேட்கலாம்.
சீட் பெல்ட்டுடன் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரீசார்ச் செய்து பயன்படுத்தும் பேட்டரி வசதியுடன் இயங்கும். குழந்தைகளும் இயக்கலாம், ரிமோட் வசதியுடன் பெற்றோர்களும் இயக்கலாம். இதன் விலை 18,000 ரூபாய் என்றும், தற்போது முன்பதிவு செய்தால், அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை! காதலன் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.